உலகிலேயே மிக உயரமான சிகரம் ; தெரிவோம் அறிவோம் -4
உலகிலேயே மிக உயரமான சிகரம் “எவரெஸ்ட் சிகரம்” தான், இதன் உயரம் 8.8கிமீ அதாவது பூமியின் அடி வாரத்தில் இருந்து 29,035 அடி இருக்கும். இந்நிலையில் அண்டார்டிகா கடலுக்கு அடியில் பல கி.மீ. ஆழத்தில் உள்ள மலை சிகரங்கள், எவரெஸ்ட் சிகரத்தின் உயர்த்தை விட 3-4 மடங்கு (38 கிமீ உயரம் ) அதிகமாக இருக்கும் என அறிவியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்டார்டிகாவில் உள்ள நில அதிர்வு மையத்தில் பதிவான ஆயிரம் தரவுகளை ஆய்வு செய்ததில், பூமிக்கு கீழ் “கோர்”-“மேன்டில்” பகுதிக்கு இடையில் இந்த மலைகள் இருக்கின்றன. தட்டுகள் நகரும் பொழுது ஏற்படும் மோதலில் இவை உருவாகியிருக்கலாம் என அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தினமும் ஒரு அறிவியல் சம்மந்தமான தகவல்கள் பற்றி தெரிந்துக் கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..