மனைவியை கடத்தி கொலை மிரட்டல் விட்ட கணவன்..!! கண்ணீர் மல்க தாய் புகார்..!!
புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு சந்தையை சேர்ந்தவர் மாரிமுத்து அவரின் மனைவி தனலட்சுமி இவர்களின் மகள் உமா மகேஸ்வரி வயது 21 தூய்மை பணியாளராக இருந்த மாரிமுத்து 4 ஆண்டுகளுக்கு முன் உடல் நிலை சரியில்லாததால் உயிர் இழந்துவிட்டார்.
எனவே அந்த வேலை அவரின் மகளுக்கு கிடைத்தது.., எனவே குடும்பத்துடன் மயிலாடுதுறையில் உள்ள குருக்கள் பண்டார தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
அங்கு வந்த தனலட்சுமி அதே பகுதியை சேர்ந்த முத்து என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ள காதலாக மாறியுள்ளது.., எனவே இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர், தனலட்சுமியுடன் தனிமையில் இருப்பதற்காக முத்து அடிக்கடி தனலட்சுமியின் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது தனலட்சுமியின் மகள் உமா மீது முத்து விற்கு காதல் ஏற்பட்டுள்ளது.., மகளுடன் காதல் வைத்துக்கொண்டே தாயுடன் கள்ள காதல் வைத்து வந்துள்ளார் முத்து.., மகள் மீது வைத்துள்ள காதல் பற்றி முத்து தனலட்சுமியிடம் கூறியுள்ளார்.
ஆனால் தனலட்சுமி அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.., எனவே தனலட்சுமியின் எதிர்ப்பை மீறி முத்து உமாவை கோவிலில் வைத்து திருமணம் செய்துக் கொண்டுள்ளார், திருமணம் ஆன 4 மாதங்கள் வரை மனைவியை சந்தோசமாக வைத்து கொண்டுள்ளார். அதன் பின் தான் முத்துவின் சுயரூபம் உமாவிற்கு தெரியவந்துள்ளது.
உமா எங்கு சென்றாலும் வரை பின் தொடர்வது.., வேலைக்கு சென்றால் கூட அவரை பின் தொடர்வது, உமா அதிகாரிகளிடம் பேசினால் அவரை அடிப்பது அங்கேயே அசிங்கமாக திட்டுவது என செய்துள்ளார்.
எந்த வேலைக்கும் போகாத முத்து.., வேலைக்கும் செல்லும் உமா வீட்டிற்கு வந்தால் கஞ்சா அடித்து விட்டு அவரை போட்டு அடிப்பது கொடுமை செய்து உடலுறவு வைத்துக்கொள்ள கட்டாய படுத்துவது.., அதற்கு மறுத்தால் மற்றவர்களுடன் சமந்த படுத்தி பேசுவது என செய்து வந்துள்ளார்.
இவரின் இந்த கொடூர செயல்களில் இருந்து விடுபட நினைத்த உமா.., அவரின் தாய் தனலட்சுமியை தொடர்பு கொண்டு போனில் பேசியுள்ளார்.., அதிர்ந்த தனலட்சுமியி உறவினர்ககளுடன் உமா வீட்டிற்கு சென்று முத்துவிடம் சண்டையிட்டு மகளை அங்கிருந்து கூட்டி வந்துள்ளார்.
அதில் ஆத்திரமடைந்த முத்து 7 பேருடன் காரில் தனலட்சுமி வீட்டிற்கு சென்று தனலட்சுமியை தாக்கி உமாவை கடத்தி சென்றுள்ளார்.., எனவே இது தொடர்பாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் தனா புகார் அளித்துள்ளார்.
புகாரின் அளித்தும் எந்த பயனும் இல்லாமல் இருந்துள்ளார் இந்நிலையில் நேற்று தனலட்சுமியின் போனிற்கு உன் மகள் உயிர் ஊசலாடி கொண்டு இருக்கு அவளை உன்னால் காப்பாற்றவே முடியாது என வாய்ஸ் மெசஜ் வந்துள்ளது.., போலீஸ் எந்த வித நடைபவடிக்கையும் எடுக்காததால் இது குறித்து இன்று காலை கமிஷ்னர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.
புகாரின் பெயரில் மீண்டும் விசாரணயை தொடங்கிய போலீசார் தீவிரமாக முத்துவை தேடி வருகின்றனர்.