குடும்பத்தகராரில் மனைவியை வெட்டிய கணவர்..!! திருப்பூரில் பரபரப்பு..!!
திருப்பூர் கொங்கு மெயின் ரோடு டி.எம்.எஸ் நகரில் உள்ள தனியார் குடியிருப்பில் மூன்றாவது மாடியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வருபவர் மணிகண்டன் (37). மதுரையை சேர்ந்த இவர் தனது இரண்டாவது மனைவி பவித்ரா (31) மற்றும் ஒன்றரை வயது மகனுடன் 1 வருடமாககுடியிருந்துவருகிறார்.
இவர் அருகில் உள்ள கோவிலின் முன்பு பூ வியாபாரம் செய்து பூசாரியாக செயல்பட்டு வருகிறார். கணவன் மனைவி இடையே அவ்வப் போது சண்டை எழுந்து வரும் நிலையில், நேற்று மாலை ஏற்பட்ட
சண்டையின் போது மனைவி பவித்ராவின் தலையை துண்டித்து பல இடங்களில் வெட்டி மணிகண்டன் கொலை செய்துள்ளார். அருகில் இருந்தவர்கள் சண்டை தொடர்பாக கேட்ட போது தான் கொலை செய்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை கேட்ட அப்பகுதி மக்கள்.., காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பெயரில் அங்கு வந்த திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையில் உடலையும் தலையையும் கைப்பற்றி மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மணிகண்டன் பவித்ராவை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இரண்டாவதாக திருமணம் செய்து தற்போது டிஎம்எஸ் நகர் பகுதியில் வசித்து வருவதாகவும்
அவர்களுக்கு ஒன்றரை வயதில் மகன் உள்ள நிலையில்
இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது.
இன்று நடந்த சண்டையில் மணிகண்டன், பவித்ராவின் தாயார் குறித்து பேசியதால், ஆத்திரம்
அடைந்த பவித்திரா. மணிகண்டனை அடித்ததாகவும் அதில் ஆத்திரமடைந்த மணிகண்டன். பவித்ராவை 30க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டிக் கொலை செய்து இருப்பதாகவும்.
கொலை செய்யப்பட்ட பிறகு பவித்ராவின் தலையை வெட்டி தனியாக கூடையில் வைத்து எடுத்துச் செல்ல முயற்சித்த நிலையில் இச்சம்பவம் அறிந்த அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் மணிகண்டனை கைது செய்து பவித்ராவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருப்பதாகதெரிவித்துள்ளனர்.