பள்ளி கட்டிடம் மீது மரம் விழுந்து 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலத்த காயம்…
திருவள்ளூர் அருகே அரசினர் ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் மீது மரம் விழுந்ததில் 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் அடுத்த சிறுவானூர் ஊராட்சியில் அரசினர் ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே பழமையான மிகப்பெரிய அரசமரம் உள்ளது.
அந்த மரத்தின் கனமான பக்கவாட்டில் உள்ள கிளையில் முறிவு ஏற்பட்டு பள்ளி கட்டிடம் மீது விழுந்தது.
இதனால் பள்ளி மாணவர்கள் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், நான்கு மாணவர்கள் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் சுயநினைவின்றி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்து மரக்கிளைகளை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.