செந்தில்பாலாஜி அமைச்சராக தொடர தடையில்லை!!!
செந்தில்பாலாஜி அமைச்சராக தொடர தடையில்லை என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்பளித்துள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 14-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது குறித்து முதலமைச்சரே முடிவெடுக்கலாம் என தெரிவித்திருந்தது.
இதை எதிர்த்து வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.
அப்போது, இலக்கா இல்லாத அமைச்சராக தொடர எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஒரு அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு சரியானது என தெரிவித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.