இந்திய வம்சாவழியை சேர்ந்த ரிஷி சுனத் இங்கிலாந்து பிரதமராக பதவியேற்றார். இந்திய வம்சாவழியை சேர்ந்த ஒருவர் இங்கிலாந்து பிரதமராகுவது இதுவே முதன்முறை ஆகும். 45 நாட்கள் மட்டுமே பிரதமர் பதிவியில் இருந்த லிஸ் டர்ஸ் பதவி விலகியதை தொடந்து இங்கிலாந்து அரசர் சார்லஸின் அழைப்பை அடுத்து இன்று இங்கிலாந்தின் புதிய பிரதமரானார் ரிஷி சுனத்.
இந்தியாவை பூர்விகமாக கொண்ட ஒருவர் இங்கிலாந்தின் பிரதமராவதால் இந்தியர்கள் இதனை சமூக வலைத்தளங்களில் பெருமையுடன் பாராட்டி வருகின்றனர். இதை தொடர்ந்து பல்வேறு தலைவர்கள் ரிஷி சுனக்கிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பிரதமராக தேர்வாகிய ரிஷி சுனக்கிற்கு நேற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவர், இரு நாட்டின் உறவு மேம்பட உழைப்போம் என்றும்,இங்கிலாந்தில் வாழும் இந்தியர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.