மதிமுக தலைமைக் கழக செயலாளராக துரை வைகோ மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில்,சென்னை அண்ணாநகரில் இன்று(மார்ச்.23) மதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
முன்னதாக, மதிமுக தலைமைக் கழக செயலாளராக துரை வைகோவுக்கு பொறுப்பு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் இதற்கு ஆதரவும், எதிர்ப்புகளும் வலுக்க தொடங்கின.
இந்நிலையில்,சென்னை அண்ணாநகரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில், இன்று(மார்ச்.23) மதிமுக பொதுக்குழு கூட்டத்தில், மதிமுக தலைமைக் கழக செயலாளராக துரை வைகோ ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இந்த கூட்டத்தை, அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் புறக்கணித்த நிலையில், கட்சிக்கு எதிராக பேசுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தரவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.