மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்… டெல்லியில் பரபரப்பு..!
நாடு முழுவதும் சமீப நாட்களாக ரெயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை, விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு மர்ம நபர்களால் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவது தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
இந்தநிலையில், டெல்லியில் சாணக்யா பூரியில் உள்ள நங்லோயில் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கும், ப்ரைமஸ் மருத்துவமனைக்கும் மின்னஞ்சல்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததுள்ளது.
தகவறிந்த நிகழ்விடத்திற்கு விரைந்த காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர், மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து மருத்துவமனைகள் முழுவதும் தீவிர சோதனை மேற்க்கொண்டு வருகின்றனர். மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.