நாட்டின் பெயர் இனி “இந்தியா” இல்லை..? புதிய பெயர் என்ன தெரியுமா..?
டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு வரும் 9,10 தேதி நடைபெற இருக்கிறது. அதற்கான அழைப்பிதழ் குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து அரசியல் பிரபலங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் “இந்திய குடியரசு தலைவர்” என குறிப்பிடாமல் “பாரத குடியரசு தலைவர்” என குறிப்பிட்டுள்ளனர்.
இதை காங்கிரஸின் மூத்த தலைவரான “ஜெய்ராம் ரமேஷ்” ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அரசியலமைப்பு சட்டத்தில் மாநிலங்களின் ஒன்றியத்துக்கு “இந்தியா” என பெயர் உள்ளதாகவும், மாநிலங்களின் ஒன்றியம் என்பதும் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதாகவும் ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அசாம் முதலமைச்சர் “ஹிமந்த பிஸ்வ சர்மா” ட்விட்டர் பக்கத்தில் பாரத குடியரசு என்று குறிப்பிட்டதுடன், சுய விவரக்குறிப்பில் அசாமின் முதலமைச்சர், பாரத் என்றும் பதிவிட்டுள்ளார்… ஆசிரியர் நாள் வாழ்த்துகளை எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ள ஆளுநர், தனது வாழ்த்தில் பாரதம் என்றே பதிவிட்டுள்ளார்.
வரும் 18 ஆம் தேதி கூட உள்ள சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இந்தியாவின் பெயர் மாற்றத்துக்கான சட்ட முன்வடிவம் கொண்டு வர இருப்பதாக என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..