கேரளாவில் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படாது – பினராயி விஜயன்

கேரளாவில் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படாது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம், மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக சிஏஏ மற்றும் என்.பி.ஆர் சட்டங்களுக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கேரளாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறினார். ஆனால், தேசிய குடிமக்கள் பதிவேடு கேரளாவில் நிச்சயமாக அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக அவர் விளக்கமளித்துள்ளார்.

What do you think?

குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு – கிராம நிர்வாக அலுவலர் கைது!