நீங்கள் பார்க்க மறந்த உங்கள் ஊர் செய்திகள்..!! உங்கள் பார்வைக்காக…!!
திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதினர்.இந்த தமிழ் தேர்வினை மாவட்டம் முழுவதும் உள்ள 136 தேர்வு மையங்களில் 7088 மாணவிகள் 6265 மாணவர்கள் என மொத்தம் 13,353 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். முன்னதாக திருப்பத்தூர் ஸ்ரீ மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுத வந்த மாணவ மாணவிகளை அமர வைத்து முதன்மை கல்வி அலுவலர் புண்ணியகோடி தேர்வு எழுதுவதற்கான அறிவுரைகள் மற்றும் வாழ்த்துக்களை கூறி அனுப்பி வைத்தார்.
வேலூர் மாவட்டம், வேலூர் ,குடியாத்தம்,பேர்ணாம்பட்டு சுற்றியுள்ள பல பகுதிகளில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 80 தேர்வு மையங்களில் நடக்கிறது இதில் 141 பள்ளிகளை சார்ந்த 15985 மாணவ,மாணவிகள் இந்த தேர்வினை எழுதுகின்றனர் இதில் 7628 மாணவர்களும் 8357 மாணவர்களும் அடங்குவார்கள் மேலும் தேர்வு கண்காணிப்பு பணியில் 1000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கல்வித்துறை பணியாளர்கள் மற்றும் பறக்கும் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அனைத்து தேர்வு மையங்களுக்கும் பலத்த பாதுகாப்பானது போடப்பட்டுள்ளது மேலும் மாணவர்கள் தேர்வு அறைக்கு செல் போன் களை எடுத்து செல்ல தடை செய்யப்பட்டுள்ளது தடையில்லா மின்சாரம் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது
தருமபுரி மாவட்டம் தொப்பையாறு அணை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு முழு கொள்ளளவை எட்டியது. இந்நிலையில் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் தேவை இருப்பதால் ஆயக்கட்டு விவசாயிகள் சார்பில் தொப்பையாறு அணையில் இருந்து தண்ணீரை திறக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் தொப்பையாறு அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக, 70 நாட்களுக்கு வினாடிக்கு 266 மில்லியன் கன அடி தண்ணீரை தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.சதீஸ் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து அணையின் தண்ணீரை மலர் தூவி அனைவரும் வரவேற்றார்கள் .
திருப்பூரில் வருகின்ற 5-ம் தேதி ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஊத்துக்குளி பகுதியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு கூட்டத்தைக் கூட்டுவதற்கு அதிமுக புது வகையான ஒரு யுக்தியை கையாண்டுள்ளது பிறந்தநாள் கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு குலுக்கல் முறையில் 3-நபர்களுக்கு தங்க நாணயம் மற்றும் 300 நபர்களுக்கு வீட்டு உபயோகப் பொருட்கள் குலுக்கல் முறையில் பரிசு பொருட்களாக வழங்கப்பட உள்ளது. மேலும் கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவருக்குமே சிறப்பு பரிசு வழங்கப்பட உள்ளது என அதிமுகவினர் சார்பில் அப்பகுதி முழுவதுமே துண்டு பிரசுரம் வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் பொதுக் கூட்டங்களுக்கு ஆள் சேர்ப்பதற்கு அரசியல் கட்சிகள் பல்வேறு வழிமுறைகளை கையாண்டுள்ளது அதில் தற்பொழுது குலுக்கல் முறையை அதிமுக கையாண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மயிலாடுதுறை கொள்ளிடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மத்தளமுடையான் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் குடிநீர் தட்டுப்பாடால் இரண்டு வருடமாக தவித்து வந்தனர். மேலும் பொதுமக்களின் கோரிக்கையையடுத்து 15-வது மத்திய நிதிக்குழு மானியம் 2024-2025ல் ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 36 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு பைப் லைன் விரிவாக்கம் செய்யப்பட்டு பணிகள் முடிவடைந்து ஆறு மாதமாகிறது. இதுவரை குடிநீர் வழங்கவில்லை என்றும் இதனால் தினந்தோறும் 2 கிலோமீட்டர் தூரம் சென்று குடிநீர் பிடித்து வீட்டுக்கு கொண்டு செல்வதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் முதல் பல துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், ஆதலால் மாவட்ட ஆட்சியர் மக்கள் குறை தீர் கூட்டத்தில் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் மனு அளித்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..