நீங்கள் பார்க்க மறந்த உங்கள் ஊர் செய்திகள்..!! உங்கள் பார்வைக்காக…!!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கீழசிந்தாமணி கிராமத்தில், குடிநீர் விநியோகம் செய்யப்படும், போர்வெல் பழுதாகி இருப்பதால், 4 மாதமாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளாததால், வேதனை அடைந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஸ்ரீ குமர முருகன் சுவாமி திருக்கோவிலில் மாசி மாத கிருத்திகை முன்னிட்டு சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. அதன் பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இதில் திரளான கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகேயுள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் பணிபுரிந்து வந்தவரின் மகன், அங்கு விளையாடி கொண்டிருந்து சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை புகார் அளிக்க சென்றபோது, தேவாலயத்தின் கமிட்டியை சேர்ந்தவர்களால் மிரட்டியதாக வேதனை தெரிவித்துள்ளார். இருப்பினும் குழந்தையின் பெற்றோர் காட்பாடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சிறார் சிறுவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் வனத்துறை சார்பில் மனிதா சிந்தித்து செயல்படு என்று விழிப்புணர்வு பேரணி, ஆம்பூர் வனத்துறை வன சரக அலுவலர் பாபு தலைமையில் நடைபெற்றது. இதனை வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் ஆஜிதா பேகம், ஆம்பூர் நகர காவல் துறை ஆய்வாளர் ரமேஷ், கே.ஏ.ஆர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ராஜாமண்ணன் ஆகியோர் கொடி அசத்து துவக்கி வைத்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே விவசாயிகள் பயன்பெற்று வரும் அரசு பொது வழி பாதையை, தனிநபர் ஒருவர் கல்கம்பம் மற்றும் முள்வேளி அமைத்து ஆகிரமிப்பு செய்துள்ளார். இதனை கண்டித்து அப்பகுதிமக்கள் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர், சோளிங்கர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பாதையை விரிவாக்கம் செய்து கொடுத்திட வேண்டி, கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..