டிக்கேட் கேட்ட பயணி.. ஆபாச வார்த்தைகளால் திட்டிய அரசு பேருந்து நடத்துநர்.. வீடியோ வைரல்..!
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சென்னையில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்ற அவர் மீண்டும் சென்னை திரும்புவதற்காக, தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற மாநகர பேருந்தில் ஏறியுள்ளார்.
பேருந்தில் ஏறிய அவர், ஊரப்பாக்கம் செல்ல வேண்டும் எனக் கூறி நடத்துனரிடம் 200 ரூபாய் நோட்டை கொடுத்தி டிக்கெட் கேட்டுள்ளார் அதற்கு நடத்துநர், சில்லறை இல்லை எனக் கூறி டிக்கெட் தர மறுத்ததால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
நீண்ட நேரமாக டிக்கெட் இன்றி பயணித்த இளைஞர், மீண்டும் நடத்துநரிடம் டிக்கெட் வழங்குமாறு கோரியுள்ளார். அதற்கு சில்லறை இல்லாமல் ஏன் பேருந்தில் ஏறுகிறீர்கள் என நடத்துநர் அவேசமாக கூறியதாக தெரிகிறது.
இதற்கு இளைஞர், உங்கள் பெயர் என்ன என கேட்டதற்கு கோபமடைந்த நடத்துநர், ஆபாசமான வார்த்தைகளால் திட்டி அடிக்கவும் பாய்ந்தார். இதைப் பார்த்த சகப் பயணிகள், நடத்துநரை கண்டித்துள்ளனர்.
இது தொடர்பான விடீயோ சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலான நிலையில் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.
-பவானி கார்த்திக்