ஆணுறுப்பை அறுக்க வேண்டும்.. – பொங்கி எழுந்த பிரபல நடிகை
கடந்த ஆகஸ்டு 9-ஆம் தேதி அன்று, கொல்கத்தா நகரை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தின் பரபரப்பே அடங்காத நிலையில், சமீபத்தில் கேரள சினிமாவின் கோர முகம் குறித்து, ஹேமா கமிட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. இவ்வாறு தொடர்ச்சியாக, பெண்களுக்கு எதிராக, பாலியல் ரீதியான சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், இந்த சம்பவங்களை எதிர்த்து, இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, தனியார் அமைப்பு சார்பில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில், பிரபல நடிகை சனம் ஷெட்டி கலந்துக் கொண்டு, உணர்ச்சி பொங்க பேசினார்.
அப்போது பேசிய அவர், “தந்தையே மகளை பாலியல் வன்கொடுமை செய்யும் சமூகத்தில் வாழ்ந்து வருகிறோம். இந்த சமூகத்தில், பெண்களுக்கு பாதுகாப்பு என்பதே இல்லை.
எனவே, இப்போது இருக்கும் தண்டனைகள் போதாது. ஆகையால், பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களில் ஈடுபடும் ஆண்களின் ஆணுறுப்பை வெட்டி வீச வேண்டும்” என்று தெரிவித்தார்.
-பவானி கார்த்திக்