திருத்தணி கிழவணம் கிராமத்தில் சேர்ந்த பாஸ்கர் என்பவர் அரக்கோணத்தில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் பணியாளராக பணியாற்றி வருகிறார்.
கராத்தே மாஸ்டரான இவர், தன் நிலத்தில் உள்ள தென்னை மரத்தில் பக்கத்து நிலத்தை சேர்ந்த, இவரது உறவினரான ஆஞ்சநேயர்ரெட்டி , மனைவி ஜோதி மற்றும் மகன் சந்திரன் ஆகியோர்கள் இளநீர் பறித்துள்ளனர்.
இதனை கராத்தே மாஸ்டர் பாஸ்கர் தட்டி கேட்டு உள்ளார், இதனை அருகில் இருந்து அவரது மகன் ஆகாஷ் வீடியோ எடுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த தென்னை மரத்தில் இளநீர் பறித்துக் கொண்டிருந்த சந்திரன் இளநீர் வெட்டும் அருவாளால் பாஸ்கரை அவரது மகன் ஆகாஷ் கண்ணு முன்னே வெட்டி சாய்த்தில் பாஸ்கர் ரத்த வெள்ளத்தில் துடிதுடிது மயங்கி விழுந்தார்.
மேலும், இந்த சம்பவத்தை வீடியோ எடுத்த ஆகாஷையும் வெட்டுவதற்காக சந்திரன் துரத்தியாகதாக கூறப்படுகிறது. இந்நிலையில், படுகாயம் அடைந்த கராத்தே மாஸ்டர் பாஸ்கர் திருத்தணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரழந்தார்.