அநாகரீகமாக பேசிய நபர்.. இறுதியில் நேர்ந்த கொடூரம்…
சென்னை பள்ளிக்கரணை ராஜிவ்காந்தி தெருவை சேர்ந்தவர் சக்திவேல்(44) கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார். அதே தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார்(25) தனியார் கூரியர் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.
இரவு சக்திவேல் குடிபோதையில் வந்தபோது அநாகரீகமான வார்த்தைகளை பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக செந்தில்குமாருக்கும் சக்திவேலுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த செந்தில்குமார் தனது கையால் சக்திவேல் வயிற்றில் ஓங்கி குத்தியுள்ளார். இதில் சரிந்து கீழே விழுந்த சக்திவேல் மூக்கில் இருந்த ரத்தம் வடிந்து மயங்கி விழுந்துள்ளார்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் சக்திவேலை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் சக்திவேல் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளிக்கரணை போலீசார் விரைந்து சென்று சக்திவேல் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் பள்ளிக்கரணை போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-பவானி கார்த்திக்