முருகனை சந்திக்க சென்ற நபர்.. எமனை சந்தித்த சோகம்.. என்ன ஆனது?
திருப்பத்தூர் மாவட்டம் கே.எம்.சாமிநகர் பகுதியை சேர்ந்தவர் ஜெகன். கட்டிட தொழிலாளியான இவர் ஆடி கிருத்திகைக்காக தனது குடும்பத்தினருடன், காவடி எடுத்து கொண்டு திருத்தணி முருகன் கோவிலுக்கு பேருந்தில் நேற்று முன் தினம் சென்றுள்ளார்.
திடீரென பாதி வழியிலேயே பேருந்தை நிறுத்திய ஜெகன், தனது குடும்ப உறுப்பினர்களை அங்கேயே விட்டுவிட்டு, ஆம்பூர் ரயில் நிலையத்திற்கு விரைந்து சென்றுள்ளார்.
அந்த சமயத்தில், ரயில் நிலையத்திற்கு வந்த ரயில் முன்பு திடீரென பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார், ஜெகனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்க்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பு வைத்தனர்.அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்