கள்ளக்காதலி திட்டியாதல் காதலன் எடுத்த விபரீத முடிவு..!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்த சூர்யா (27). கார் டிரைவராக பணியாற்றி வரும் இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
இந்தநிலையில் சூர்யாவுக்கு பண்ருட்டியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் சூர்யாவுக்கு பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று சூர்யா தனது கள்ளக்காதலியை பார்க்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கும் அந்த பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த சூர்யா அந்த பெண் கண்முன்னே தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த நிகழ்விடத்திற்கு சென்ற பண்ருட்டி போலீசார் சூர்யாவின் உடலைக் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்த போலீசார் தற்கொலையா அல்லது கொலையா என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்