வீட்டுமனை பட்டா வழங்க வலிறுத்தி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்…
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வீட்டுமனை பட்டா வழங்க வலிறுத்தி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அடுத்த தென் நந்தி ஆலயம் கிராம பகுதி அருகே மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்காக இடமானது தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தங்கள் கிராம பகுதியில் உள்ள இடத்தினை இப்பகுதியை சேர்ந்த வீட்டு மனை பட்டா இல்லாத கிராம மக்களுக்கே வழங்க வேண்டும் என வலியுறுத்தி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த வாலாஜா வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் கிராம மக்களிடையே பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
மேலும் சம்பவம் குறித்து வாலாஜா வட்டாட்சியர் தெரிவிக்கையில் அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்கான இடம் தேர்வு செய்து பணி மட்டுமே நடைபெற்று வருவதாகவும், கிராம மக்கள் வீட்டு மனை பட்டா கேட்டு வருவதை தொடர்ந்து கிராம மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு மனுக்களின் விசாரணையின் அடிப்படையில் சரியான பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.