அதிமுக-வும், த.வெ.க-வும் போட்ட பிளான் காலி.. ராகுல் காந்தி அதிரடி பதிவு..
கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, கலைஞர் கருணாநிதியின் முகம் பதித்த நாணயம் வெளியிடும் விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில், திமுகவினர் மட்டுமின்றி, பாஜகவின் மூத்த தலைவர்கள் பலர், கலந்துக் கொண்டனர்.
மேலும், பாஜகவின் மூத்த தலைவர் ராஜ்நாத் சிங், கலைஞரை பற்றி பல்வேறு சிறப்பான கருத்துக்களை கூறியிருந்தார்.
இதனால், திமுகவும், பாஜகவினரும் நெருக்கமாக பழகி வருகிறார்களா? என்ற சந்தேகம், இணையத்தில் எழுந்தது. இந்த சந்தேகத்தை, பூதாகரமாக மாற்றி, திமுகவின் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியை, தங்களது கூட்டணிக்கு அழைத்து வரலாமா? என்று அதிமுகவும், த.வெ.க-வும் முயற்சி செய்ததாகவும் கூறப்பட்டது.
ஆனால், இந்த யூகங்களை தவிடுபொடியாக்கும் வகையில், ராகுல் காந்தி இணையத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சைக்கிள் பயணத்தை மேற்கொண்டு, அதனை இணையத்தில் பதிவிட்டிருந்தார்.
அந்த வீடியோவை ரீ ட்வீட் செய்திருந்த காங்கிரஸ் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற எதிர்க் கட்சி தலைவருமான ராகுல் காந்தி, “சகோதரரே.. சென்னையில் நாம் இருவரும் ஒன்றாக எப்போது சைக்கிள் ஓட்டுவோம்” என கேட்டிருந்தார்.
அன்புள்ள சகோதரர் ராகுல் காந்தி உங்களுக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் சென்னை வாருங்கள், நாம் இருவரும் ஒன்றாக சவாரி செய்து சென்னையின் இதயத்தை ஆராய்வோம்..
நான் உங்களுக்கு தர வேண்டிய ஸ்வீட் பாக்ஸ் இன்னும் நிலுவையில் உள்ளது. நாம் சைக்கிள் சவாரி செய்த பிறகு, என் வீட்டில் இனிப்புகளுடன் ஒரு சுவையான தென்னிந்திய மதிய உணவை சுவைப்போம்” என பதிலுக்கு கூறி உள்ளார்.
இவ்வாறு இருவரும் நெருக்கமாக பேசி இருப்பதால், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரசை பிரிக்கவே முடியாது என்பது ஊர்ஜிதம் ஆகியுள்ளது.