செல்போன் திருடனை சினிமா பாணியில் பதுங்கி கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திரா சுகிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஏழை பெருமாள் ( 44). இவர் கடந்த 14ஆம் தேதி தனது வீட்டில் செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு உறங்கிக் கொண்டிருந்தார். இதே போல் இவருடைய மகனும் செல்போனுக்கு சார்ஜ் போட்டு இருந்தார். மறுநாள் அதிகாலையில் எழுந்து பார்த்தபோது செல்போன் காணவில்லை பல்வேறு இடங்களில் தேடி பார்த்த போது கிடைக்கவில்லை. இதே போல் பக்கத்து வீட்டு உள்ள வீடுகளிலும் செல்போன்கள் காணாமல் போய்விட்டது.
இது குறித்து ஏழை பெருமாள் பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து செல்போன் திருடிய நபரை தேடி வந்தனர். இந்நிலையில் காணாமல் போன செல்போன் உரிமையாளர் ஏழை பெருமாள் தொடர்ந்து தனது போனுக்கு போன் செய்து போன் செய்து கொண்டிருந்தார். எதிர் திசையில் இருந்த நபர் அந்த போனை எடுத்து ரூபாய் பதினைந்து ஐந்து ஆயிரம் பணம் கொடுத்தால், உங்களுடைய போனை ஒப்படைப்பதாக கூறியுள்ளார் .
இதனையடுத்து நடந்த சம்பவத்தை காவல்துறையிடம் தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமை கொண்ட குழுவினர் பணத்தை தயார் செய்து திருடன் சொல்லும் இடத்திற்கு கொண்டு செல்லுமாறு ரகசியமாக கூறி இருந்தார்கள். இதன் பேரில் பணம் கொண்டு செல்லப்பட்டு ஒரு இடத்தில் வைக்கப்பட்டது. அப்போது இந்த திருடன் பணத்தை எடுக்க வரும் போது, மறைந்திருந்த போலீசார் அவனை கை களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் திண்டிவனம் அருகே ஆச்சிப் பார்க்கம் கிராமத்தை சேர்ந்த புருஷோத்தமன் மகன் ஐயனார் (37) என தெரிந்தது. பின்னர் அவரிடம் இருந்த செல்போன், பணத்தை பறிமுதல் செய்தனர்.
– யமுனா