பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் வகுப்பறையில் தூக்கிட்டு தற்கொலை!!
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் வகுப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் புனவாசல் கிராமத்தைச் சேர்ந்த ஜெகநாதன் மகன் தீபக். வழக்கம்போல் பள்ளி வகுப்பறைகள் காலை திறக்கப்பட்ட நிலையில், முதல் மாணவனாக தனது வகுப்பறைக்கு வந்த தீபக், வீட்டில் இருந்து கொண்டு வந்த கயிற்றால் வகுப்பறையில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .
பின்னர் வகுப்பறைக்கு வந்த சக மாணவர்கள் தீபக் தூக்கு கயிற்றில் தொங்குவதை பார்த்து அதிர்ந்து போய் ஆசிரியரிடம் தகவல் தெரிவித்தனர்.
இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்து, மாணவனின் உடலை கைப்பற்றி கடலாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
மாணவனின் தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
பத்தாம் வகுப்பு மாணவன் பள்ளி வகுப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.