16 வயது சிறுமியிடம் கேவலமான செயலை செய்த காவலர்.. சிறையில் அடைத்த போலீஸ்.!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு மயிலாடுதுறை மாவட்டம் தரகம்பாடி தாலுகா பெரம்பூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகின்றார்.
இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 3 மகன்கள் உடன் சொந்த ஊரில் காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் அவரது நண்பரின் மகளான 16வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அடிக்கடி போனில் பேசி வந்த நிலையில் கடந்த ஜூலை எட்டாம் தேதி 16 வயது சிறுமியை காவலர் குடியிருப்புக்கு வரவழைத்து வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட உதவி மையத்திற்கு வந்த புகாரின் அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சமூக பணியாளர் ஆரோக்கியராஜ் பெண் உதவியாளருடன் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து திருநாவுக்கரசு மீதான குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இன்று பாதிகப்பட்ட சிறுமிக்கு மருத்துவமனையில் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருகிறது.
திருமணமான காவலரே இது மாதிரியான செயலில் ஈடுப்பட்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
-பவானி கார்த்திக்