தங்கம் விலைக்கு நிகராக உயரும் தக்காளி விலை..!! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்..!!
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நாளொன்றுக்கு 1200 டன் தக்காளி கூடைகள் இறக்குமதி செய்யப்பட்டு வந்துள்ளது.. சில நாட்களாக பெய்து வந்த மழையால்.. மார்க்கெட்டில் சேமிப்பு கிடங்கு இல்லாததால் 700 டன் மட்டுமே இறக்குமதி செய்துள்ளனர்.
இதனால் கிலோ 40 ரூபாய்கு விற்ற தக்காளியின் விலை.., தற்போது கிலோ 70 ரூபாயில் இருந்து 100 ரூபாய்கு விற்கப்பட்டு வருகிறது. சென்னையின் மற்ற புறநகர் பகுதியில் தக்காளி விலை கிலோ 110 ரூபாய்கு விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளி விலை மட்டுமின்றி பீன்ஸ் 120 ரூபாய், இஞ்சி 200 ரூபாய்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.., இந்த விலை உயர்வால் வியாபாரிகள் மட்டுமின்றி இல்லத்தரசிகள்.., உணவகம் வைத்திருப்பவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் தக்காளியின் விளைச்சல் சராசரியாக இருக்கும் நிலையில்.., தக்காளிகள் குறிவாகாவே விற்கப்பட்டு வருவதாகவும் வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த விலை உயர்விற்கு காரணம்.., கோயம்பேடு மார்க்கெட்டில் சேமிப்பு கிடங்கு இல்லை என்பது தான்.., சேமிப்பு கிடங்கு இல்லாததால்.., குறைவாகவே நாங்கள் காய்கறிகளை இறக்குமதி செய்து.., விற்பனை செய்து வருகிறோம் என்றும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.