தமிழக அரசின் ஆவின் பொருட்களின் விலை இன்று(மார்ச்.04) முதல் உயர்த்தப்படுவதாக ஒருங்கிணைந்த பால்வளத்துறை அலுவலகம் அறிவித்துள்ளது.
தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவின் பொருட்களின் விலை இன்று(மார்ச்.04) முதல் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, 1 லிட்டர் ஆவின் நெய் ரூ.515ல் இருந்து ரூ.535 ஆக உயர்ந்துள்ளது. அரை லிட்டர் தயிர் ரூ.27ல் லிருந்து ரூ.30 ஆகவும், குல்பி ரூ.25ல் இருந்து ரூ.30 ஆக உயர்ந்துள்ளது. 200 கிராம் பாதாம் பவுடர் ரூ.80ல் இருந்து ரூ.100 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு இன்று(மார்ச்.04) முதல் அமலுக்கு வந்த நிலையில், இதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கண்டனம் தெரிவித்து, ஆவின் பொருட்களின் விலை உயர்வு விவகாரத்தில் தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.