கஞ்சா அடித்து கொண்டு கோவிலில் நுழைந்த வாலிபரை தர்மஅடி கொடுத்த பூசாரி..!!
கோவிலில் பூசாரி சாமிக்கு பூஜை செய்து பார்த்து இருப்போம் ஆனால் இங்கு ஒரு பூசாரி கோவிலுக்கு வந்த ஒருவருக்கு பூஜை செய்து தர்ம அடி கொடுத்து உதைத்துள்ளார்.
திருப்பூர் மங்கலம் சாலையில் உள்ள செல்வ விநாயகர் கோவிலுக்கு வந்த வாலிபர் ஒருவர் கோவில் கருவறையின் உள் ஒளிந்து கொண்டு இருக்க. அப்போழுது தரிசனம் செய்து கொண்டிருந்த பெண் ஒருவர், அதை கவனித்து கோவில் நிர்வாகியிடம் சொல்லி இருக்கிறார்.
கருவறைக்கு சென்ற நிர்வாகிகள் அந்த வாலிபரை இழுத்து பிடித்து ஏன் இங்கே ஒழிந்து இருக்கிறாய் என கேட்டுள்ளனர், அதற்கு இளைஞர் என்னை ஒருவன் வெட்ட வருவதாகவும்.., அதற்காக தான் இங்கே ஒழிந்து கொண்டு இருக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.
பேசி கொண்டே அந்த வாலிபர் கோவில் குருக்களை கை ஓங்கியுள்ளார், அப்போது குருக்கள் தடுக்க.., அந்த வாலிபரின் பாக்கெட்டில் இருந்து கஞ்சா பாக்கெட் விழுந்துள்ளது.., அதிருந்து போன நிர்வாகிகள் அனைவரும் அந்த வாலிபர் சொல்வது பொய் எனவும் கோவிலில் இருந்து காசுகளையும் திருடியுள்ளார்.
எனவே அது பற்றி கேட்ட பொழுது அந்த கஞ்சா இளைஞருக்கும் கோவில் நிர்வாகிகளுக்கும் கை கலப்பு ஏற்பட்டுள்ளது. பின் இது பற்றி திருப்புர் மத்திய காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தகவலின் பெயரில் அங்கு வந்த காவலர்.., அந்த கஞ்சா வாலிபரை இழுத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..