புடவை கட்டும்போது ஒல்லியாக தெரிய சில டிப்ஸ்..!
புடவை என்பது இந்திய பெண்களுக்கு பிடித்தமான உடைகளில் ஒன்று. புடவை அணியும் பெண்களும் அப்போது கூடுதல் அழகாக இருப்பார்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளும்போது புடவையில் நாம் ஒல்லியாகவும் அழகாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கும். அப்படி ஒல்லியாக இருக்க சில டிப்ஸ் பயன்படுத்தலாம், அது என்னவென்று இப்போது பார்க்கலாம்.
முதலில் புடவை கட்டிப் பழக விரும்புகிறீர்கள் என்றால் புடவை தேர்ந்தெடுக்கும் முன் நல்ல மெலிதாக இருக்கும் துணியை தேர்ந்தெடுக்க வேண்டும். அத்தகைய புடவை தான் உங்களின் உடம்போடு ஒட்டிக்கொள்ளும்.
இரண்டாவதாக உங்கள் புடவையின் நிறந்தை அடர்த்தியாக இருக்குமாறு தேர்ந்தெடுங்கள், ஏனென்றால் அடர்த்தியான நிறத்தினை கொண்ட புடவைகள் நம் உடம்பை மெலிதாக காட்டும்.
புடவையின் பிரிண்டிங் எப்போதுமே மேலிருந்து கீழாக இருக்க வேண்டும். காரணம் இத்தகையது உங்களை மெலிதாக காட்டும். ஹரிசாண்டல் கோடுகள் இருக்கும் பிரிண்டிங்கை தவிர்க்க வேண்டும்.
நீங்கள் அணியும் பிளவுஸ் உங்களின் உடம்பிற்கு பொருத்தமாக இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள். இந்த பிளவுஸ் தான் உங்க புடவையின் அழகை எடுத்துக்காட்டக்கூடியது.
புடவை கட்டும்போது ஸ்லிம்பிட் முறையை தேர்ந்தெடுத்து கட்ட வேண்டும். இதுவே உங்களை ஒல்லியாகவும் அழகாகவும் காட்டும். இடுப்பை சுற்றி அதிகமாக துணி இருக்கும் முறையை தவிர்க்க வேண்டும். இது உங்களை குண்டாக காட்டும்.
புடவை கட்டியபின் உங்களின் இடுப்பு பகுதியை மெலிதாக காட்ட ஒட்டியானம் அணியலாம். ஒட்டியானம் உங்களை ஒல்லியாகவும் புடவை கலையாமலும் இருக்க உதவும்.
புடவை கட்டும்போது நீங்கள் ஹை ஹீல்ஸ் தேர்வு செய்து அணியலாம். இது உங்களின் உயரத்தை அதிகரித்து உங்களை ஒல்லியாக காட்டும்.
புடவை கட்டும்போது உங்க பிளவுஸின் நெக் V வடிவத்தில் இருந்தால் அது உங்களை உயரமாகவும் ஒல்லியாகவும் காட்டும்.
புடவையில் நீங்கள் நல்ல தோரணையில் இருக்க வேண்டும். இது உங்களை எப்போதும் நம்பிக்கையுடனும் மெலிதாகவும் இருக்க உதவும்.