சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கைதி..!! சிறையில் தற்கொலை…!!
புதுச்சேரியில் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதி தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்..
கடந்த மார்ச் மாதம் புதுச்சேரியை சேர்ந்த 9 வயது சிறுமியை அதே பகுதியில் இருந்த 2பேர் கஞ்சா போதையில் சிறுமியை மாற்றி மாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.. பாலியல் வன்கொடுமை செய்ததில் அந்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார்.. அதை மறைக்க கொலை செய்யப்பட்ட சிறுமியை ஒரு கோணிப்பையில் சுத்தி கிணற்றில் வீசியுள்ளனர்..
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.. சம்மந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது.. அதன் பின் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றத்திற்காக அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்..
அவர்கள் இருவருக்கும் தூக்குதண்டனை வழங்கிட வேண்டுமென்று புதுச்சேரி மக்கள் கோரிக்கை விடுதிருந்த நிலையில் அதற்கான விசாரணை செப்டம்பர் 17ம் தேதி நடத்தப்படும் என நீதிபதி கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டிருந்தார்..
அந்த விசாரணை நாளை நடத்தப்பட இருந்த நிலையில் காலாப்பட்டு சிறையில் கைதி விவேகானந்தன் சிறையின் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.. இந்த தற்கொலை குறித்து காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. இதற்கு முன்னரும் கைதி விவேகானந்தம் சலவை சோப்பை விழுங்கி தற்கொலைக்கு முயற்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..