வாயை திறந்ததால் வந்த பிரச்சனை..! பிரியாணி மேன் கைது..!
பிரியாணி மேன் என்ற யுடியூபர் அபிஷேக் ரபி சைபர் கிரைம் போலீஸாரால் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது பெண் வன்கொடுமை சட்டம், தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அபிஷேக் ரபி என்கிற வாலிபர் பிரியாணி மேன் என்கிற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். யூடியூபர்கள் சிலர் எளிதில் பிரபலமடைவதற்காக ஆல்ரெடி பிரபலமாகி இருக்கும் யூடியூபர்களை அவதூறாக பேசி பிரபலமடைவது வாடிக்கையாகிவிட்டது.
இதனால் அவர்களின் ஆதரவாளர்களும் மோதிக் கொள்கின்றனர். அந்த வகையில் பிரபல யூடியூபரான இர்ஃபானை பிரியாணி மேன் அவதூறாக பேசி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். கடந்த ஆண்டு இர்பானின் கார் விபத்தில் சிக்கியதில் மூதாட்டி ஒருவர் மரணமடைந்தார். அப்போது அந்த காரை இர்பான் ஓட்டவில்லை என்றும் அவருடைய உறவினர் ஓட்டியதாக சொல்லப்பட்டது. அது போல் இர்பானின் மனைவி கர்ப்பமாக இருந்த போது இர்பான் துபாயில் தனது குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து அதை யூடியூபில் வெளியிட்டிருந்தார். இந்தியாவில் குழந்தையின் பாலினத்தை கண்டறிவது தண்டனைக்குரிய குற்றம் என்பதால் இர்பானின் வீடியோ பெரும் சர்ச்சையை கிளப்பியது.
பின் சுகாதாரத் துறையினர் இர்பானிடம் இதுபற்றி விசாரணை மேற்கொண்டு இர்பானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர். முடிந்த போன விஷயத்தை பிரியாணி மேன் மீண்டும் எடுத்து இர்பானை கடுமையாக விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதற்கு இர்பானும் ஆதாரங்களுடன் விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டிட்டிருந்தார். தற்போது அந்த விவகாரம் பெரும் யூடியுபில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெய்லர் அக்கா யூடியூப் சேனல் :
அதேபோல் டெய்லர் அக்கா என்கிற யூடியூப் சேனலில் பெண் ஒருவர் டெய்லரிங் குறித்த விஷயங்களை வீடியோவாக பதிவிட்டு வருகிறார். அதில் பிளவுஸ் தைத்து கொடுப்பதை அந்த பெண் வெளியிட்டிருந்த வீடியோவை பிரியாணி மேன் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த பெண்ணை மட்டுமின்றி பல பெண்களை தரக்குறைவாக பேசுவது., விமர்சிப்பது, ஆபாச வார்த்தைகளால் திட்டுவது போன்ற வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார்., குறிப்பாக செம்மொழி பூங்கா குறித்து ஆபாசம் கொப்பளிக்க பேசி வீடியோவை வெளியிட்டுள்ளார் இதனால் பிரியாணி மேனை பலர் கடுமையாக விமர்சித்தும் கமெண்ட்டில் திட்டியும் பதிவிட்டிருந்தனர்.
இப்படி இருக்க நேற்று பிரியாணி மேன் யூடியூப்பில் நேரலையில் தற்கொலை செய்து கொள்வது போல லைவில் வீடியோவை போட்டு தனது தற்கொலைக்கு காரணம் ஜேசன்தான் என சொல்லிக் கொண்டே தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அப்போது நெட்டிசன்கள் சிலர் அவரது தாயை தொடர்பு கொண்டு விஷயத்தை கூறி அவரை காப்பாற்றியுள்ளார். லைவில் தற்கொலை செய்துகொள்வதை போல வீடியோ ஒன்றை வெளியிட்டு பிரச்சனை என்றால் தற்கொலை தான் தீர்வு என்று மற்றவர்கள் மனதில் வன்மத்தை தூண்டிய காரணத்திற்காக பிரியாணி மேன் அபிஷேக் ரபியை சென்னை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர். மேலும் அவர் மீது பெண் ஒருவர் ஆபாசமாக பேசியதாக புகாரும் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அபிஷேக் ரபி மீது பெண் வன்கொடுமை தடுப்பு பிரிவு, தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..