ஆட்டம் கண்டுபோன புதுச்சேரி அரசு..! நாரயாணசாமி பரபரப்பு பேட்டி..!
புதுச்சேரியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் “முதலமைச்சர் ரங்கசாமி” மீது பாஜகவினர் கூறிய ஊழல் குற்றச்சாட்டால் என்.ஆர்.காங்கிரஸ் பாஜக ஆட்சி ஆட்டம் கண்டு விட்டதாக புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாரயாணசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் பாராளுமன்றத்தில் ராகுல்காந்தி கேட்ட கேள்விகளுக்கு பிரதமர் மோடி எந்தவித பதிலும் சொல்லாமல் தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார் என்றவர் தற்போது புதுச்சேரி அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. என்றார்.
புதுச்சேரி பாஜக எம்.எல்.ஏக்கள் அக்கட்சி தலைவருடன் ரகசியக்கூட்டம் நடத்தி பாஜக அமைச்சர்களை மாற்ற வேண்டும், முதலமைச்சர் ரங்கசாமி தங்களை கலந்தாலோசிக்காமல் செயல்படுகின்றார், ஊழல் ஆட்சி நடைபெறுவதாகவும் குற்றஞ்சாட்டி அதன்பின் ஆளுநரையும் சந்தித்து புகார் கொடுக்க போவதாக
அவர் தெரிவித்துள்ளார்.
அதன் பின் டெல்லி சென்ற பாஜக எம்.எல்.ஏக்கள் தங்களது கட்சி தலைவர்களிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாராளுமன்ற தேர்தலில் பாஜக தோல்வியடைந்ததற்கு முதல்வர் ரங்கசாமி தலைமையிலான ஆட்சியும் நிர்வாக சீர்கேடும் தான் காரணம் என நாராயணாசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த காரணங்களால் தான் அவர்கள் கூட்டணியை விட்டு வெளியே வரவேண்டும் என தெரிவித்துள்ளார்கள். ரங்கசாமி தலைமையிலான ஆட்சியில் ரெஸ்டோபார் உரிமம் வழங்குவதிலும் ஊழல், மாட்டு தீவனம் வாங்குவதில் ஊழல், குப்பை அள்ளும் டெண்டரில் ஊழல் என இப்படி ஊழல் மலிந்த ஆட்சியாக மாறிவிட்டது..
இதனை காங்கிரஸ் கட்சி ஏற்கனவே குற்றஞ்சாட்டி இருந்தது அதை பாஜகவினர் ஏற்றுக்கொண்டு அக்கட்சி தலைமையிடம் புகார் அளித்தது. அதன் மூலம் காங்கிரஸ் கூறிய புகார்கள் உண்மையானது.
இந்த ஊழல் குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களிடமிருந்து எந்தவித பதிலும் இல்லை என்றதால் பாஜக எம்.எல்.ஏக்கள் அளித்த புகார்கள் உறுதியானது. அவர்களது உட்கட்சி விவகாரம் ஆனால் அவர்கள் கூறிய ஊழல்புகாருக்கு முதலமைச்சர் ரங்கசாமி என்ன பதில் சொல்ல போகின்றார்கள். என கேள்வி எழுப்பினார்.
ஊழலை முதலமைச்சரும் அமைச்சரும் மூடிமறைக்க பார்க்கின்றார்கள். மேலும் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமாராயணன் வீடு ரூ.2 கோடி செலவு செய்து புதுப்பிக்கப்பட்டுள்ளது. அரசு சொத்தை கொள்ளை அடிக்கும் வேலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் ஈடுபட்டுள்ளராத குற்றஞ்சாட்டினார்.
முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான ஆட்சி மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் 100க்கும் 100 உண்மை என்றும் இதனால் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் பாஜக ஆட்சி ஆட்டம் கண்டுள்ளதாக நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..