ஏழைகளின் வயிற்றில் அடிகும் ரயில்வே..! தமிழக ரயில்களின் ஏசி பெட்டிகள் அதிகரிப்பு..!!
மக்கள் அதிகம் போக்குவரத்திற்காக பயன் படுத்துவது “இரயில்”. இந்தியாவிலேயே மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயில் மத்திய அரசு பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. குறிப்பாக நஷ்டத்தில் இயங்கி வரும் ரயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைக்க இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஒரே அடியாக மத்திய அரசிடம் ஒப்படைத்து விடாமல் சிறிது, சிறிதாக இந்த தனியார் மயமாகும் நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என எதிர்காட்சிகள் தெரிவித்துள்ளனர்.
அதாவது ரயில்வேயில் சில பணிகள், சில வழித்தடங்கள் தனியார் மையத்திடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளது. அதற்கான செயல்களும் நடந்து வருகிறது என சில எதிர்கட்சி தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் இயங்கி வரும், முக்கியமான 7 ரயில்களில் இரண்டாம் வகுப்பு பெட்டிகளை இந்திய ரயில்வே அகற்றியுள்ளது. அதன்படி கோவை – ராஜ்காட் (குஜராத் ) எஸ்பிரஸ் ரயிலில் இருந்து படுக்கை வசதியுடன் கூடிய 4 பெட்டிகளை நீக்கப்பட்டு அதற்கு பதிலாக 4ஏ.சி. பெட்டிகளை இணைத்துள்ளது.
இதனால் இனி வரும் நாட்களில் ராஜ்காட் எக்ஸ்பிரஸ் ரயிலில், இனி 8 ஏசி பெட்டிகளும், 9 இரண்டாம் வகுப்பு பெட்டிகளும், 3 முன் பதிவில்லா பெட்டிகளும் இருக்கும் என அறிவித்துள்ளது.
கோவை – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் :
கோவை – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் 4 பெட்டிகள் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக ஏசி பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
கோவை ராமேஸ்வரம் எக்ச்பிரஸ் ரயிலில் 8 ஏசி பெட்டிகளும், 9 இரண்டாம் வகுப்பு பெட்டிகளும் 3 முன் பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கப்படும்.
எழும்பூர் ஜோத்பூர் விரைவு ரயிலில் :
எழும்பூரில் இருந்து செல்லும் ஜோத்பூர் விரைவு ரயிலில் 5 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் நீக்கப்பட்டு 6 ஏசி பெட்டிகளை இணைத்துள்ளது.
சென்னை நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் :
சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்லும் விரைவு ரயிலில் இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் 5 பெட்டியும், ஒரு முன் பதிவில்லா பெட்டியும் நீக்கப்பட்டு.., அதற்கு பதிலாக 6 ஏசி பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
மன்னார் குடி பகத் கி கோதி ரயில் :
மன்னார் குடி பகத் கி கோதி ரயிலில் இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் 4 பெட்டிகள் நீக்கப்பட்டு, 4 ஏசி பெட்டிகள் சேர்க்கப் பட்டுள்ளது.
ராமேஸ்வரம் ஒகா குஜராத் விரைவு ரயில் :
ராமேஸ்வரம் ஒகா குஜராத் விரைவு ரயிலில் 5 இரண்டாம் வகுப்பு பெட்டிகளும் ஒரு முன் பதிவு இல்லா பெட்டியும் நீக்கப்பட்டு.., 6 முதல் வகுப்பு பெட்டிகளை சேர்த்துள்ளனர்.
சென்னை சென்ட்ரல் லோக்மானிய திலக் விரைவு ரயில் :
சென்னை சென்ட்ரல் லோக்மானிய திலக் விரைவு ரயிலில் ஒரு முன்பதிவில்லா பெட்டியை, ஏசி பெட்டியாக மாற்றியுள்ளனர். இந்த பெட்டிகள் மாற்றம் இந்த மாதம் இறுதிக்குள் அமலுக்கு வந்து விடும் என்று இந்திய ரயில்வே நிறுவனம் அறிவித்துள்ளது.
இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை விட, ஏசி பெட்டிகளுக்கு 3 மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் கூடுதல் ஏசி பெட்டிகளை சேர்த்து இருப்பது நடுத்தர மக்கள் மற்றும் ஏழை மக்களை வெகு விரைவாக பாதிக்கும் என்றும் பலரும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.