வெளுத்து வாங்க போகும் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் அடுத்த 2 நாட்களுக்கு நீலகிரி மற்றும் கோயம்பத்தூரில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் நேற்று தெரிவித்திருந்தது.
மேலும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்திருந்தது.
இதனைதொடர்ந்து நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-பவானி கார்த்திக்