பனியன் விற்பனை போல நடந்த கஞ்சா விற்பனை..!! பரபரப்பான திருப்பூர்…!!
திருப்பூரில் வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்த பனியன் தொழிலாளி உட்பட இருவர் கைது 12 கிலோ கஞ்சா பறிமுதல்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் இவர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் தனது நண்பர்கள் உதவியுடன் கர்நாடக மாநிலம் சென்று கஞ்சா வாங்கி வந்து வீட்டில் வைத்து விற்பனை செய்து வருவதாக திருப்பூர் தெற்கு போலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வெள்ளியங்காடு பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது ராஜமாணிக்கம் தனது வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது.
மேலும் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியை சேர்ந்த பாண்டி என்பவர் கஞ்சா வாங்கி செல்ல வந்ததும் தெரியவந்தது. கையும் களவுமாக இருவரையும் பிடித்த போலீசார் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து ராஜமாணிக்கத்தையும் பாண்டியையும் கைது செய்தனர். மேலும் இவருடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..