மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு இந்தியக் குடியரசு தலைவர் செயலகம் கடிதம் அனுப்பியுள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவியை திரும்ப பெற வலியுறுத்தி, இந்தியக் குடியரசு தலைவருக்கு கோரிக்கை விடுத்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் தமிழ்நாட்டு மக்களிடம் நடத்திய கையெழுத்து இயக்கத்தின் மூலம் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெறப்பட்டது .
பின்னர் பெறப்பட்ட கையெழுத்தை செப்டம்பர் 20ஆம் தேதி, மதி.மு.க பொதுச் செயலாளர் வைகோ குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் கையெழுத்துப் படிவங்களை ஒப்படைத்து கடிதம் கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் குடியரசுத் தலைவர் செயலகத்தின் துணைச் செயலாளர், வைகோவிற்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளனர்.
அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டதாவது:
“தங்களின் கடிதம் பெற்றுக் கொள்ளப்பட்டு, உள்துறை அமைச்சகத்தின் பார்வைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.