மல்யுத்த வீராங்கனை கொடுக்கப்பட்ட பாதுகாப்பு வாப்பஸ்..!! டெல்லி போலீஸ் கொடுத்த விளக்கம்..!!
இந்தியா மல்யுத்த வீராங்கனைகளுக்கான பாதுகாப்பு வாபஸ் செய்யப்பட்டுள்ளது.. அதற்கான விளக்கத்தை டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது..
இந்திய மல்யுத்த சங்கத்தின் முன்னாள் தலைவர் “பிரிஜ் பூஷன்” சில பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக அவர் மீது அளிக்கப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது..
அதில் பாதிக்கப்பட்ட சில பெண்கள் பிரிஜ் பூஷனுக்கு எதிராக சாட்சி அளிக்க இருந்த மல்யுத்த வீராங்கனைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.. அப்படி வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டிருப்பதாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்திய மல்யுத்த சங்கத்தின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் பாலியல் தொல்லை அளித்ததாக வீராங்கனைகள் புகார் அளித்திருந்தனர். அவருக்கு எதிராக வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்துக்கு பிறகு பிரிஜ் பூஷன் மீது டெல்லி நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. பாரிஸ் ஒலிம்பிக்கில் எடை கூடுதலாக இருந்ததால் பதக்க வாய்ப்பு இழந்த போகத் நாடு திரும்பியதும் தங்களது போராட்டம் தொடரும் என அறிவித்திருந்தார்.
இந்த பின்னணியில் தற்போது வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை டெல்லி காவல்துறை விலக்கி கொண்டிருப்பதாக வினேஷ் போகத் குற்றம் சாட்டியுள்ளார். போகத்தில் எக்ஸ் தள பதிவை தொடர்ந்து பாதுகாப்பை விலக்கி கொள்ள எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளது.
பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் சென்று சேராததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் டெல்லி காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..