“உள்ளார்ந்த தூய்மையை அடையாளம்…” குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பேச்சு..!!
ஆன்மிகம் என்பது உள்ளே இருக்கும் சக்தியை அங்கீகரித்து நடத்தையிலும் எண்ணங்களிலும் தூய்மையைக் கொண்டுவருவது என குடியரசு தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம், மவுண்ட் அபுவில் நடைபெற்ற ஆன்மிகம் தொடர்பான உலகளாவிய உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர், ஆன்மிகம் என்பது மதமாக இருப்பதோ அல்லது உலக நடவடிக்கைகளை கைவிடுவதோ அல்ல என்றார்.
எண்ணங்கள், செயல்களில் தூய்மை என்பது வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் சம நிலையையும் அமைதியையும் கொண்டு வருவதற்கான வழி என்றும் அவர் கூறினார். ஆன்மிகம் என்பது தனிப்பட்ட வளர்ச்சிக்கான ஒரு வழி மட்டுமல்ல என குறிப்பிட்ட அவர், சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான ஒரு வழியாகவும் அது உள்ளது என்றார்.
உள்ளார்ந்த தூய்மையை, அடையாளம் காண முடிந்தால் மட்டுமே ஆரோக்கியமான, அமைதியான சமுதாயத்தை நிறுவுவதற்கு நம்மால் பங்களிக்க முடியும் என்றும் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..