உணர்ச்சியை உண்டாக்கும் காதின் கதை..!! இதை படிக்க மறக்காதீங்க..!
உடலில் உள்ள உறுப்புகள் பேசினால் எப்படி இருக்கும்..? என்பதை ஒரு கற்பனை கதையாகவும்., சிந்தித்து பார்க்க வேண்டியவற்றை பற்றியும் இதில் படிக்கலாம்.. இது மனதில் குருகுருப்பை உண்டாக்குகிறது..
நான் தான் காது., நாங்கள் இருவரும் இரட்டை சகோதரர்கள்… ஆனால் இது எங்கள் தலைவிதியா என தெரியவில்லை நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டதில்லை..
ஆனால் மற்றவர்கள் சொல்வதையெல்லாம் கேட்கும் வல்லமையை கடவுள் கொடுத்து இருந்தாலும் பேசும் சக்தியை கடவுள் கொடுத்ததில்லை..
வசையோ இசையோ..
நல்லதோ கெட்டதோ
எல்லாவற்றையும் கேட்டு அதை மூளைக்கும், மனதிற்கும் கொண்டு செல்வோம்..
முக கண்ணாடி அணிந்தால் அதன் கம்பியை சுமக்கும் எங்களுக்கு..? அது ஒரு சுமையாக தெரிவதில்லை..
அது மட்டுமா கம்மல்., ஜிமிக்கி என அணிந்து பெண்களை அழகாக காட்டுவதும் நாங்கள் தான்.. புதிதாக அணியும் போது வலி., என இருக்கும்.
படிக்கின்ற சமயத்தில் தவறு செய்தால் ஆசிரியர்கள் பலரும் காதை பிடித்துதான் திருகுவார்கள்.. மூளை சொல்ல மறந்ததற்கு காதிற்கு ஏன் தண்டனை..?
காதில் கம்மல்.., ஜிமிக்கி என அணிந்து அதை சுமப்பது நான். ஆனால் அழகான பெயர் முகத்திற்கு கிடைக்கிறது..
அதுமட்டுமல்ல
கண்ணுக்கு மை,
முகத்திற்கு க்ரீம், மேக்கப்,
உதட்டிற்கு லிப்ஸ்டிக்
உண்டு.. ஆனால் எங்களுக்கு..?
கண்களை பற்றிக் கூட எத்தனையோ பாடல் உண்டு ஆனால் காதிற்கு..?
கடவுள் மனிதனை படைக்கும் போது மீதியிருந்த பாகத்தை என்ன செய்வதென்று தெரியாமல்.. எங்களை இருபக்கமும் ஒட்டிவிட்டார் போல…
இதை நான் யாரிடம் சொல்லி அழுவேன்..? என் மன வேதனையை கண்ணிடம் சொன்னால் அழுது விடுகிறது.. மூக்கிடம் சொன்னால் ஒழுகுகிறது.. வாயிடம் சொன்னால் விக்கி விக்கி கலங்குகிறது..
காதில் மாட்டும் கம்மல்., கண்ணாடி., ஹெட் செட் என எதை மாற்றுவதாக இருந்தாலும்.. எல்லாவற்றையும் மாட்ட எங்களை மாட்டிவிட்டீர்கள்…
ஒரு காதில் வாங்கி இன்னொரு காது வழியாக வெளியே சொல்லக்கூடாது.. என சொல்லுப்பவர்கள் என்றாவது ஒரு நாளாவது நான் சொல்வதை கேட்பது காது மட்டும் தான் என சொன்னது உண்டா..?
இதை சற்று சிந்தித்து பாருங்க..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..