கரதோயா பீடேஸ்வரி பத்ரகாளியாக உருவான கதை..!!
கடந்த சில மாதங்களாக ஆன்மீக வழிபாடுகள் பற்றி பார்த்து வருகிறோம்.., அதில் இன்று நாம் தெரிந்துக் கொள்ள இருப்பது “பத்ரகாளி” அம்மன் வழிபாடு, பத்ரகாளி அம்மன் அவதரிப்பு எப்படி என்பதை இந்த ஆன்மீக தகவலில் பார்க்கலாம்.
பங்களாதேஷில் உள்ள போக்ரா புகை வண்டி நிலையத்தில் இருந்து 20 கிமீ தொலைவில் பவானிபூர் அருகே கரதோயா எனும் நதி ஓடுகிறது. இந்த நதிக்கரையில் தான் “பூதத்திரி” என்ற ஆலயம் அமைந்துள்ளது.
இந்த ஆலையத்தில் கரதோயா பீடேஸ்வரி என்ற அம்மன் பத்ரகாளி உருவாமாக காட்சி அளிக்கிறார். இந்த பத்ரகாளி அம்மனுக்கு திருஉருவம் இல்லை, பத்ரகாளியாக பாவித்து தொன்று தொட்டு வருகிறார்.
அம்பிகை அம்மனின் 51 சக்தி பீடங்களில் இத் திருத்தலமும் ஒன்று. இத்திருத்தலத்தில் அன்னையின் இடது கன்னம் வீழ்ந்ததால் அது மஹாசக்தி பீடமாக மாறியது. ஒரு காலத்தில் சும்பன் மற்றும் நிசும்பன் எனும் இரண்டு அரக்கன்கள் போர் வெறி கொண்டு நாடெங்கும் உள்ள ராஜ்யங்களை கைப்பற்றி சூறையாடியுள்ளனர். அரகனுக்கு பயந்து முனிவர்களும், மக்களும் பயந்து பயந்து வாழ்ந்துள்ளனர்.
தேவலோக்கத்திலும் அசுரனின் ஆட்சி தலைவிரித்து ஆடியதால், தேவர்கள் ஒன்று கூடி.., அசுரனின் கண்ணில் படாமல் பிரகஸ்பதியிடம் சென்று முறையிட்டுள்ளனர். பின் தேவர்கள் முறையிட்ட படி இன்னல்களை தீர்க்க தேவர்கள் அனைவரும் கைலாயம் சென்று மகாதேவியாக இருக்கும் ஆதிபராசக்தியை மனமுருக தியானித்து பீஜகஷரா மந்திரத்தை சொல்லி யாகம் செய்துள்ளனர்.
தேவர்களின் யாகத்திற்கு பலன் தரும் விதமாக அன்னை அகிலாண்டஸ்வரி சிம்ம வாகனத்தில் காட்சி கொடுத்தார். பின் தேவர்கள் அனைவரும் தாயே அகிலாண்டஸ்வரி ஜெகன் மாதா எங்களின் குறை மற்றும் துயரங்களை நீங்கள் அறிவீர்கள்.., எங்களின் குறைகளை நீங்கள் தீர்க்க வேண்டும் தாயே என தேவர்களும், முனிவர்களும் அம்மன் முன் குறைகள் வைத்துள்ளனர்.
தேவர்களின் குறையை தீர்க்க பராசக்தி அம்மன் தன் தேகத்தில் இருந்து ஒரு உருவத்தை தோற்று வித்துள்ளார்.., அவருக்கு “கெளசிகை” என பெயரிட்டுள்ளனர். கருமை நிறத்தோடு மிகவும் ஆக்ரோஷமாக அசுரர்களை அளித்ததால் இவர் “பத்ரகாளி” என அழைக்கப்பட்டார்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் ஆலய தரிசனங்கள் மற்றும் பரிகாரங்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..