கார்கில் போர் உருவான கதை..!
கடந்த 1999ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தானுக்கும் இடையில் கார்கில் போர் நடந்துள்ளது. இந்த போரில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கார்கில் நகரின் அருகில் உள்ள டைகர் மலையில் நடைபெற்றது. அந்த கார்கிலை மீட்க இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையாக பார்க்கப்பட்டது.
மே 1999ல் பாகிஸ்தான் இராணுவமும், காஷ்மீர் போராளிகளும் பாகிஸ்தானிலிருந்து கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி இந்தியாவிற்குள் நுழைந்ததே போருக்கு முக்கிய காரணமாகும். போரின் ஆரம்பத்தில் பாகிஸ்தான், பழியை முற்றிலுமாக காஷ்மீர் போராளிகள் மீது சுமத்தியது.
ஆனால், உயிரிழந்த வீரர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலமாகவும், போருக்குப்பின் பாகிஸ்தான் பிரதமர் மற்றும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆகியோர் விடுத்த அறிக்கைகள் மூலமாகவும், பாகிஸ்தான் துணை இராணுவப் படையினர், தளபதி அஷ்ரஃப் ரஷீத் தலைமையில் போரில் ஈடுபட்டிருந்தது உறுதியானது.
இந்திய வான்படையின் துணையோடு, இந்தியத் தரைப்படை, பாகிஸ்தான் இராணுவம் மற்றும் போரளிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட இந்தியப் பகுதிகளை மீட்டது. சர்வதேச நாடுகள் பாகிஸ்தானின் செயலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், பாகிஸ்தான் படைகள் இந்தியாவுடனான போரைக் கைவிட்டன.
இப்போரானது, மிக உயர்ந்த மலைத்தொடரில் மிகுந்த சவால்களை எதிர்கொண்டு நடந்த போருக்கு சிறந்த உதாரணமாகும். இதுவரை இந்த போர் மட்டுமே, அணு ஆயுத சக்தியுடைய நாடுகள் இரண்டுக்கிடையில் நடந்த நேரடிப் போராகும். இந்தியா முதன்முறையாக 1974ல் வெற்றிகரமாக அணு ஆயுதச் சோதனை நிகழ்த்தியது.
பாகிஸ்தானும் இரகசியமாக அணு ஆயுத ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தாலும், 1998 ஆம் ஆண்டு இந்தியா நிகழ்த்திய இரண்டாவது அணு ஆயுதச் சோதனைக்குப் பிறகு இரண்டு வாரங்கள் கழித்தே பாகிஸ்தான் தனது முதல் அணு ஆயுதச் சோதனையை நிகழ்த்தியது.
காஷ்மீர் நகரம், இமய மலைத்தொடருக்கு மிக அருகில் அமைந்துள்ளதால் அந்நகர் வழியாகச் செல்லும் ஸ்ரீநகரையும் – லேவையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையான NH 1D என்ற இரு வழிச்சாலை அமைக்கப்பட்டிருந்தது. மேலும் அச்சாலை பாகிஸ்தான் படையினரால் குண்டு வீசித் தாக்கப்பட்டுக் கொண்டிருந்ததால் படைகளை எல்லைப் பகுதிகளுக்குக் கொண்டு செல்வது இந்திய இராணுவத்திற்கு சவாலான காரியமாக அமைந்தது.
அவ்வழியாகச் சென்ற இந்திய படையினர் பாகிஸ்தானின் தாக்குதலுக்கு உள்ளாயினர். NH 1D தேசிய நெடுஞ்சாலை தொடர்ந்து பாகிஸ்தான் படைகளால் தாக்கப்பட்டு வந்ததாலே பகுதி மற்ற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டது.
போர் ஆரம்பித்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இந்தியப் படையினர் பெரும்பான்மையான பகுதிகளை ஆக்கிரமிப்புக்காரர்களிடமிருந்து மீட்டனர். அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களின் படி, 75% முதல் 80% வரையிலான ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் மீண்டும் இந்தியாவின் வசம் வந்திருந்தது.
கார்கிலில் மோதல்கள் ஆரம்பமானவுடன், பாகிஸ்தான் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்காவின் உதவியை நாடியது. மிகப்பெரிய அளவில் போர் வெடிக்கும் என்ற அச்சத்தில், பாகிஸ்தான் தனது அணு ஆயுதங்களை ஆயத்தப்படுத்தியிருக்கிறது என்பதை அமெரிக்க உளவுத்துறை கண்டறிந்து, அப்போதைய அமெரிக்க அதிபரான பில் கிளின்டனுக்கு அவரது உதவியாளர் புரூஸ் ரீடல் மூலமாகத் தெரிவித்தது. அமெரிக்க அதிபர் பில் கிளின்டன், பாகிஸ்தான் தனது படைகளை இந்தியப் பகுதிகளில் இருந்து விலக்கிக் கொள்ளும் வரை இப்பிரச்சனையில் தலையிட மறுத்துவிட்டார்.
வாஷிங்டன் ஒப்பந்தப்படி, சூலை 4 ஆம் தேதி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தனது படைகளைத் திரும்பப் பெற ஒப்புக்கொண்ட பின் போர் அநேகமாக முடிவுற்ற போதிலும், சில இடங்களில் பாகிஸ்தான் படைகள் இந்தியப் பகுதிகளில் ஆக்கிரமிக்கப்ப்ட்ட நிலைகளிலிருந்து வெளியேறாமல் இருந்தனர். மேலும் பாகிஸ்தான் படையினருக்கு ஆதரவாக போரிட்ட ஜிகாத் அமைப்புகள் பாகிஸ்தானின் பின்வாங்கும் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தன; அவை போரட்டத்தைத் தொடர்ந்தன.
இந்திய இராணுவம், தனது இறுதித் தாக்குதலை சூலை மாதத்தின் இறுதி வாரத்தில் தொடங்கியது. திரஸ் பகுதியில் இருந்து பாகிஸ்தான் படையினர் முழுமையாக வெளியேற்றபட்ட பின், சூலை 26 ஆம் தேதி போர் முற்றிலும் முடிவுக்கு வந்தது. அந்த நாள் இந்தியாவில் கார்கில் வெற்றி நாள் என்று இந்தியாவில் ஆண்டுதோரும் கொண்டாடப்படுகிறது. போரின் முடிவில், 1972 ஆம் ஆண்டு சிம்லா உடன்படிக்கையில் இந்தியாவின் பகுதிகள் என வரையறுக்கப்பட்ட அனைத்து பகுதிகளையும் இந்தியா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..