கர்நாடகாவில் தொடரும் கடையடைப்பு போராட்டம்..!!
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாட்டிற்கு 15 நாட்களுக்கு காவிரியில் இருந்து ஐந்தாயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடகா அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது.
இதை எதிர்த்து கர்நாடக விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. இதன் காரணமாக பெங்களூரில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணைய தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பதை எதிர்த்து, கன்னட அமைப்புகள் கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ள நிலையில், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து கர்நாடக மாநில எல்லைவரை மட்டுமே தமிழ்நாடு பதிவெண் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இதனால் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திலும் மிகப் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கே இன்று ஒரே நாளில் மட்டும் 44 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் கோலாரிலும் கன்னட அமைப்புகள் முழு அடைப்புப் போராட்டம் நடத்தி வருகின்றன. பெங்களூர் மாநகரில் பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டதால் கர்நாடகாவின் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..