நீண்ட நாட்களாக தொடரும் ஆத்தூர் மக்களின் போராட்டம்..!! இதற்கான தீர்வு எப்பொழுது தான் வரும் என ஆதங்கம்..!!
ஆத்தூர் அருகே அடிப்படை வசதிகளின்றி அவதிப்படும் மல்லியகரை ஊராட்சி 2வது வார்டு பகுதி மக்கள், குடிநீர், சாகக்டை, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனே செய்து தரவேண்டுமென பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்,
சேலம் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்ரியத்திற்கு உட்பட்ட மல்லியகரை ஊராட்சி 2வது வார்டு ஜெனிதா நகர் பகுதி மலைக்குன்றின் அடிவார பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பல ஆண்டுகளாக குடிநீர், சாக்கடை மற்றும் போதிய சாலை வசதிகள் இல்லாததால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர், மேலும் இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கப்படும் குடி நீருக்கான மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி பத்தாயிரம் லிட்டர் கொள்ளளவு மட்டுமே கொண்டுள்ளதால் குடி நீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருவதோடு மேடான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் செல்லாமல் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது,
இதே போல் குடியிருப்பு பகுதியில் கழிவு நீர் செல்ல உரிய சாக்கடை வசதி இல்லாததால் அவரவர்கள் வீட்டிற்கு முன்பாகவே பள்ளம் தோன்றி கழிவு நீரை விட்டு தேக்கி வைப்பதால் தூர் நாற்றம் வீசி நோய் தொற்று ஏற்பட்டு வருகிறது.
மேலும் மலை பகுதியில் இருந்து பாம்பு, காட்டுப்பன்றி உள்ளிட்ட விஷ சந்துக்குள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதால் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கும் அப்பகுதி மக்கள் சன்னாசி வரதன் மலை வடபுறத்தில் வசிக்கும் மக்கள் சென்று வர குண்டும் குழியுமாக இருக்கும் மண் சாலையை தார்ச்சாலையாக மாற்ற வேண்டு மென என கோரிக்கை வைத்துள்ளனர்.
அதுமட்டுமின்றி 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியை அமைத்து குடிநீர் பற்றாக்குறையை போக்கி சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டு மென அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும் முதலமைச்சர் தனிப்பிரிவிற்கும் பலமுறை புகார் மனு அளித்துள்ளனர்.
மனு அளித்து நீண்ட நாட்கள் ஆகியும் உரிய நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர்,