உரிய நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்…!! நீதிமன்றத்தை புறக்கணித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்..!!
இலங்கைப் போரில், தமிழர்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் 2009-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, உயர் நீதிமன்ற வளாகத்தில் போலீஸ் அதிகாரிகளுக்கும் வழக்கறிஞர் களுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. இதில் அவர்கள் மட்டுமின்றி நீதிபதிகள், பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் படுகாயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து, ஒவ் வொரு ஆண்டும் பிப்ரவரி 19-ம் தேதியை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கருப்பு தினமாகக் கடைபிடிக்கின்றனர்.
இந்தாண்டும் உயர்நீதி மன்ற ஆவின் வளாகத்தில் வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்ற முதல சி பி ஐ அலுவலகம் வரை போராட்டத்தில் ஈடுபட்டனர், கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர் போராட்டத்தை கட்டுப்படுத்த 200-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்பட்டனர் , போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களை கைது செய்த காவல்துறையினர் ராயபுரத்தில் அமைந்துள்ள சமுதாய நல கூடத்திற்கு மூன்று பேருந்துகள் மூலம் கொண்டு சென்றனர்
கைது செய்வதற்கு முன்பாக மெட்ராஸ் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மோகன கிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்தித்து பேட்டி அளித்தார்..
கடந்த 19.02 .2009 ஆம் ஆண்டு தமிழக காவல்துறையினர் சென்னை உயர்நீதிமன்றத்திற்குள் அத்து மீறி எந்தவிதமான காரணமும் இல்லாமல் வழக்கறிஞர்களை மிக கொடூரமாக தாக்கினர் , அந்த சம்பவத்தில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர் போராட்டம் நடத்தி வருகிறோம் இந்த வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் சிபிஐயும் விசாரணையில் மெத்தனம் காட்டுகிறது.
இதனால் இந்த செயலை கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம், சிபிஐ விசாரணை நியாயமாக நடத்தப்படவில்லை, மேலும் இந்த தாக்குதல் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது தற்போது வரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை, கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் காவல்துறைக்கு மற்றும் சிபிஐக்கு வழக்கறிஞர் சங்கம் சார்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இன்றைய தினம் நடைபெற்றது போல் ஒவ்வொரு ஆண்டும் சிபிஐ அலுவலகம் முற்றுகையிடப்பட்டு மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தப்படும், என்றும் மொத்த ரீதியாக நடத்தப்படும் போராட்டங்கள் மிக விரைவாக வெற்றி பெறும், இந்த வாரம் மற்றொரு போராட்டம் நடத்தப்படவுள்ளதாக, வழக்கறிஞர் இன்பதுரை தெரிவித்தார்.
உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உரிய நீதி கிடைக்கும் வரை இதுபோன்ற போராட்டங்கள் தொடரும் என்றும் அவர் கூறினார். சென்னை உயர்நீதிமன்ற நுழைவாயில் முன்பு வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தியதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது. முன்னறிவிப்பின்றி வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தியதால் அவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..