நீங்க அதிகமாக டிரை ஃப்ரூட்ஸ் சாப்பிடுபவரா அப்போ இது உங்களுக்குத்தான்..!
பழங்களை சாப்பிடுவதினால் நமது உடலுக்கு ஊட்டச்சத்துக்கள், தாதுபொருட்கள், வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள் ஆகியவற்றை தருகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, செரிமானத்தை சீராக்குகிறது, இதயத்திற்கு ஆரோக்கியம் அளிக்கிறது ஆனால் அமிர்தமும் அளவிற்கு மிஞ்சினால் நஞ்சாகும், அதுபோல எதையும் அளவாக சாப்பிடுதல் நல்லது.
- உலர் பழங்களை அதிகமாக சாப்பிடுவதினால் என்ன பிரச்சனைகள் உண்டாகும் என்பதை பார்க்கலாம்.
- உலர் பழங்களில் கலோரிகள் அதிகமாக இருக்கிறது, எனவே அதிகமாக சாப்பிடுவதினால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு அதிகம்.
- சிலவகை பழங்களில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும், இது ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். சர்க்கரை நோயாளிகள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
- அதிக அளவிலான நார்ச்சத்து செரிமானத்தை குறைத்து, வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் ஆகிய பிரச்சனைகளை உண்டாக்கும்.
- உலர் பழங்களில் இருக்கும் சர்க்கரை பற்களை பாதித்து, சொத்தை, ஈறு பிரச்சனை ஆகியவற்றை ஏற்படுத்தும்.
- உலர் பழங்களில் இருக்கும் அதிகபடியான கலோரிகள் உடலின் எடையை அதிகரிக்கிறது. முக்கியமாக இரவு நேரங்களில் இதுமாதிரி சாப்பிட்டால் கட்டாயம் உடல் எடை அதிகரிக்கும். இரவில் முடிந்தவரை குறைவாக சாப்பிடுவது உடலுக்கு நல்லது.
- உலர்ந்த பழங்களின் விலை அதிகமானது, அன்றாடம் அதிகமான உலர் பழங்கள் சாப்பிடும்போது அது குடும்பத்தில் பட்ஜெட்டை அதிகரிக்கும்.