பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக தொடர வாய்ப்பு இருக்கா..??
சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ள நிலையில், மீண்டும் அவர் சட்டமன்ற உறுப்பினராக தொடர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி ஆகியோரை குற்றவாளிகள் என அறிவித்து 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு செய்து இருந்தார்.
மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பொன்முடி வழக்கில் உயர்நீதிமன்றம் சட்ட விதிகளை முறையாக பின்பற்றவில்லை என கருத்து தெரிவித்தது.
இந்நிலையில் 3 ஆண்டுகள் சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இதனால், பொன்முடி மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறப்படுகிறது.
தனது பதவியை மீட்க பொன்முடி தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகத்தை அணுகலாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.