பாஜக கூட்டணி கட்சிகளின் சின்னம்..? டிடிவி தினகரன் டூ பாமக ராமதாஸ் பேட்டி..!!
பாஜகவுடன் டி.டி.வி. தினகரன் கூட்டணி :
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக, புதிய நீதிக் கட்சி மற்றும் சமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் பாமகவுக்கு 10 சீட்டுகளும், புதிய நீதிக் கட்சிக்கு வேலூர் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் 4 தொகுதிகள் கேட்ட நிலையில் இரண்டு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என பாஜக தெரிவித்ததால் ஜிகேவாசன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் இருந்தார்.
இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு டி.டி.வி தினகரன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டி.டி.வி.தினகரன் நாங்கள் கேட்ட 2 தொகுதிகளை பா.ஜ.க. வழங்கியுள்ளது.
* நாங்கள் எந்தெந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதை பாஜக அறிவிக்கும்.
* எங்களுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு செய்துள்ளார்கள் என்பது முக்கியமல்ல, பாஜக கூட்டணி வெற்றி பெறுகிறதா என்பதே முக்கியம்.
நான் தேனியில் போட்டியிட வேண்டும் என்பது எங்கள் தொண்டர்களின் விருப்பம் எனவே அவர்களின் ஆசைக்கு இணங்க நான் தேனி தொகுதியில் போட்டியிட்டு பாஜக கூட்டணியை வெற்றி பெற செய்ய போகிறோம். அதற்காக அமமுக இரவு பகலாக உழைத்து வருகிறது.
முன்னதாக, பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களை சந்தித்து அவர்களை சந்தித்து பேசினோம். அப்போது தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் எங்களுக்கு ஆதரவு தந்து பேசுமாறு கேட்டு கொண்டார்கள். எனவே அவர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய போகிறேன்.
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் அமமுக கட்சியின் டிடிவி தினகரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அதில் அவர் கூறியதாவது, 14 வருடங்கள் பின் தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கு வந்திருக்கிறேன். ஏற்கனவே தேனி மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து போது தேனி பாராளுமன்ற தொகுதிக்கு வேண்டியதை அம்மா ஜெயலலிதாவிடம் கூறி தேனி தொகுதி மக்களுக்கு தேவைப்படும் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளோம்.
அதன்பின் ஜெயலலிதா அம்மா இறப்பிற்கு பிறகு ஆர்கே நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயட்சையாக நின்று போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றேன். என்னை எதிர்த்து போட்டியிட்ட சில வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தார்கள். நான் வெற்றிபெற காரணமே என் மக்கள் தான். அவர்களை நம்பி கேட்ட ஓட்டு வீண்போகவில்லை.
அதேபோல தற்போது தேனி பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியின் சார்பில் குக்கர் சின்னத்தில் தற்போது வேட்பாளராக போட்டியிடுகின்றேன். எனக்கு நீங்கள் வாக்களித்து வெற்றி பெற செய்தால் இந்த தொகுதிக்கு தேவையான அனைத்தையும் பாரத பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்து அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பேன். என பிரச்சாரம் செய்துள்ளார்.
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பதற்காக பாஜக – பாமக இடையிலான ஒப்பந்தம் கடந்த மார்ச் 19ம் தேதி கையெழுத்தானது. அதில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள், பாஜக அமைச்சர்கள் பாமகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கடந்த முறை 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதை போலவே இந்த முறையும் அதிக பட்ச சீட்டுகள் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுப்பதாக உறுதி அளித்தனர்.
அதற்கிடையே, அன்புமணியிடம் பேச்சுவார்த்தை நடத்திய பாஜக மற்றும் வி.கே.சிங் கிஷன் ரெட்டிக்கு 10 தொகுதிகளும் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுப்பதாகவும், பாஜக ஆட்சி மீண்டும் வந்தால் மத்திய அமைச்சர் பதவி தருவதாக உறுதி அளித்துள்ளனர்.
இரு தரப்பிலும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட நிலையில், பாமக எந்த பக்கம் நகரும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இப்போது பாஜக – பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
பாமக ராமதாஸ் திண்டிவனம் பிரச்சாரம் :
பாமக நிறுவனர் ராமதாஸ், திண்டிவனம் அருகே கோவடி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோயில் எதிரே வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து நேற்று இரவு தனது பிரச்சாரம் குறித்து பேசினார். அதில் அவர் பேசியது, மீண்டும் பாஜக ஆட்சியை நீங்கள் கொண்டு வந்தால். நீங்கள் நினைத்து பார்க்காத திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றப்படும். எனவே யாருக்கு வாக்களிக்க வேண்டும் என நினைத்து வாக்களியுங்கள். மேலும் பாமகவுக்கு வழங்கிய ரூ.1 லட்சம் தேர்தல் நிதியை ராமதாஸ் பெற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிட தக்கது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..