அமலாக்கத்துறைக்கு எதிரான தமிழ்நாடு அரசு வழக்கு 27 -ஆம் தேதி விசாரணை!!
அமலாக்கத்துறைக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்துள்ள வழக்கின் விசாரணை 27 -ஆம் தேதி விசாரிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர்மோகன் அமர்வு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மணல் அள்ளுவதாகவும், அதன் மூலம் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாகவும் கூறி கடந்த செப்டம்பர் மாதம் அமலாக்கத்துறையினர் பல்வேறு தொழிலதிபர்கள் வீடுகளில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் கோடிக்கணக்கில் ரொக்க பணம், பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இது குறித்து தமிழக நீர்வளத்துறை பதிலளிக்கவும், குறிப்பிட்ட 10 மாவட்ட ஆட்சியர்கள் பதில் கூறவும் அமலாகித்துறை சம்மன் அனுப்பியது.
இந்நிலையில், அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது.
அதில், மணல் எடுக்கும் விவகாரம் என்பது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரில் கீழ் வராது என்றும், அமலாக்கத்துறை தங்கள் வரம்பை மீறி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், மனுவை அவசா வழக்காக விசாரிக்க கோரி நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர் மோகன் அமர்வில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் முறையிட்டார்.
முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வரும் திங்கட்கிழமை விசாரிப்பதாக தெரிவித்தனர்
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.