மசோதாக்களை கிடப்பில் போட்ட கடுப்பில் உச்சநீதிமன்றம் போன தமிழ்நாடு அரசு..!! நீதிமன்றத்தின் தீர்ப்பு..?
ஆளுநர் ஆர் என் ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றப்பட்ட 20-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் ஆளுநருக்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் இருப்பதாக தமிழக அரசு குற்றம்சாட்டி வருகின்றது.
மாநில பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை அரசுக்கு வழங்கும் மசோதா, சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் உருவாக்கும் மசோதா, கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக் காலம் குறைப்பு மசோதா உள்ளிட்ட பல மசோதாக்கள் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்தி வருவதாக குற்றம்சாட்டி ஆளுநர் மீது தமிழக அரசுத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிய மசோதாக்களை நிறைவேற்ற ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர்கள் பரிசீலிப்பதற்கான கால வரம்பை நிர்ணயித்து வழிகாட்டுதலை உச்சநீதிமன்றம் வகுக்க வேண்டும் என்றும், ஆளுநர்கள் மசோதாவை பரிசீலனை செய்ய குறிப்பிட்ட காலக்கெடு விதிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..