காதல் செய்ய சொல்லி வற்புர்த்திய வாலிபர்… மறுத்த காதலிக்கு நடந்த சோகம்..!
ஆந்திர மாநிலம் அனகாபள்ளி பகுதியில் வசித்து வரும் சுரேஷ் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை காதலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும் சிறுமியிடம் தனது காதலை கூறியபோது சிறுமி காதலிக்க மறுத்துள்ளதாக கூறப்படும் நிலையில் சிறுமியியை தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனைகுறித்து சிறுமி பெற்றோரிடம் கூறியதை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் சுரேஷ் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனை அடுத்து சுரேஷை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் கைதான சுரேஷ் சில தினங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்துள்ளதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து சிறுமியின் வீட்டை அவர் அவ்வப்போது நோட்டமிட்ட வந்துள்ளார்.
சம்பவதன்று சிறுமியின் பெற்றோர் இல்லாததை தெரிந்து கொண்ட அவர் திடீரென வீட்டிற்கு புகுந்து சிறுமியை மறைத்து வைத்திருந்த கத்தியால் சிறுமியை சரமாரியாக வெட்டி உள்ளார்.
இதில் சம்பவ இடத்திலேயே சிறுமி பரிதாபமாக உயிர் இழந்ததாக தெரிகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுகாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார் சுரேஷை தேடி வந்த நிலையில் அவர் தலைமறைவாகிவிட்டதாகவும் அவரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
-பவானி கார்த்திக்