சிறுமியை திட்டமிட்டு கொலை செய்த வாலிபர்…!! மாவட்ட அமர்வு நீதிபதி அதிரடி தீர்ப்பு…!!
மயிலாடுதுறை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை மயிலாடுதுறை நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் மாவட்ட அமர்வு நீதிபதி விஜயகுமாரி பரபரப்பு தீர்ப்பு:-
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சித்தன்காத்திருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி என்பவரது மகன் கல்யாணசுந்தரம் என்கிற வைரவேல்(35). திருவெண்காடு காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9-ஆம் தேதி 10-ஆம் வகுப்பு படித்துவந்த 15 வயது மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பின்னர் சிறுமி தன்னை அடையாளம் காட்டிவிடக் கூடாது என்பதற்காக அவரை காலால் கழுத்தில் மிதித்ததில் படுகாயம் அடைந்த சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, திருவெண்காடு போலீஸார் போக்சோ மற்றும் கொலை வழக்கு பதிவு செய்து கல்யாணசுந்தரத்தை கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் சிறுமியை கொலை செய்த கல்யாணசுந்தரத்துக்கு, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் ஒரு ஆயுள் தண்டனையும், கொலை குற்றத்துக்காக ஒரு தண்டனையும் என இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.4,000; அபராதம் விதித்து மாவட்ட அமர்வு நீதிபதி விஜயகுமாரி உத்தரவிட்டார்.
இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட அரசு வழக்குரைஞர் ராமசேயோன் மற்றும் போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..