பூட்டிய கடைக்குள் ஆட்டையை போட்ட திருடன்..!!
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அரியன் வாயலில் பூட்டிய கே.ஜி.என் செல்போன் கடையை உடைத்து 47 ஆயிரம் ரொக்கப் பணம், 1.50 இலட்சம் மதிப்பிலான செல்போன் திருட்டு.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அரியன்வாயலில் கே.ஜி.என் செல்போன் கடை பிரபலமான கடையாகும். முகமது அல்டாப் என்பவருக்கு சொந்தமான கடையினை இரவு பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் கே.ஜி.என் கடை உள்ள தெருவில் இரவு மர்ம நபர்கள் கடப்பாரையை கொண்டு பூட்டுகளை நீக்கி உடைத்து கடைக்குள் புகுந்து கடையில் இருந்த 1.50 லட்சம் மதிப்பிலான செல்போன் களையும் 47 ஆயிரம் ரொக்கப்பணத்தையும் திருடி சென்றுள்ளனர்.
இன்று காலையில் வழக்கம் போல் கடைக்கு சென்று பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதையும் அதில் உள்ள பொருட்கள் மற்றும் பணம் திருடப்பட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்து முகமது அல்டாப் மீஞ்சூர் காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..